பெண்களை தாக்கும் தைராய்டு பாதுகாப்பு முறை
1 தை 2023 ஞாயிறு 17:00 | பார்வைகள் : 10022
தைராய்டு பிரச்சனை பரம்பரையாகவும் வரலாம். தாய்க்கு தைராய்டு பிரச்சனை இருந்தால் குழந்தைக்கும் தைராய்டு பிரச்சனை உள்ளதா என்பதை சிறுவயதிலேயே சோதித்து தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
மேலும் பெண்கள் பூப்படையும் சமயத்தில் முகப்பரு, முடி கொட்டுதல், மறதி, டென்ஷன், படபடப்பு போன்ற பிரச்சனைகள் தோன்றும். காரணமின்றி இந்த அறிகுறிகள் தென்பட்டால் தைராய்டு பிரச்சனை இருக்கிறதா என்பதை சோதிக்க வேண்டும். இது பற்றி பல பெண்களுக்கு தெளிவாக தெரியவில்லை.
அறியாமையை தவிர்த்து, தைராய்டு அளவைக் கண்டறிந்து சிகிச்சை மேற்கொள்வதன் மூலம் உடலில் உண்டாகும் மற்ற பிரச்சனைகளை சரி செய்ய முடியும். உடற்பயிற்சி மூலமும் இந்த தொல்லையை எதிர்கொள்ளலாம். வாக்கிங் செல்வது அவசியம். சத்தான உணவுகள் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும்.
அதே சமயத்தில் தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகளை ஒருபோதும் எடுத்துக் கொள்ளக் கூடாது. உணவில் கல் உப்பு பயன்படுத்துவதன் மூலம் அயோடின் குறைபாட்டைத் தடுக்கலாம்.
சுடு தண்ணீரில் கல் உப்பு போட்டு தொண்டையில் படும்படி கொப்பளிப்பதன் மூலம் தொண்டையில் அயோடின் சேர வாய்ப்புள்ளது. இது போன்ற நடைமுறைகளால் தைராய்டு பாதிப்புகளில் இருந்து காத்துக் கொள்ளலாம்.