Paristamil Navigation Paristamil advert login

வீடொன்றில் இருந்து பெண்ணின் சடலம் மீட்பு! - கணவர் கைது!!

வீடொன்றில் இருந்து பெண்ணின் சடலம் மீட்பு! - கணவர் கைது!!

10 சித்திரை 2025 வியாழன் 14:37 | பார்வைகள் : 1481


வீடொன்றில் இருந்து பெண் ஒருவருடைய சடலத்தை காவல்துறையினர் மீட்டுள்ளனர். அப்பெண்ணின் கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஏப்ரல் 9, நேற்று புதன்கிழமை மாலை இச்ச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. பிரான்சின் மேற்கு பகுதியான Saintes (Charente-Maritime) நகரில் வசிக்கும் வயது குறிப்பிடப்படாத பெண் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு அழைக்கப்படு, அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போது நிலமை கைமீறிச் சென்றிருந்தது.

இரத்த வெள்ளத்தில் உறைந்து கிடந்த பெண்ணின் சடலத்தை மீட்டு உடற்கூறு பரிசோதனைகளுக்காக அனுப்பி வைத்தனர்.

அப்பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குடும்ப வன்முறை காரணமாக பிரான்சில் கடந்த 2023 ஆம் ஆண்டில் 96 பெண்கள் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்