வேலை நிறுத்தத்தில் இணையும் புதிய தொழிற்சங்கம்!!

12 சித்திரை 2025 சனி 17:55 | பார்வைகள் : 547
பிரான்சில் உள்ள மூன்றில் இரண்டு தொடருந்து தொழிலாளர்களைக் கொண்ட SUD Rail தொழிற்சங்கம் வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், அவர்களோடு CGT-Cheminots எனும் தொழிற்சங்கமும் இணைந்துள்ளது.
பெரும்பாலும் தொடருந்து சாரதிகளைக் கொண்ட குறித்த தொழிற்சங்கம் வரும் மே 5 ஆம் திகதி இந்த வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும், அதை அடுத்து அன்றைய தினம் போக்குவரத்து பெருமளவில் பாதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாரதிகள், கட்டுப்பாட்டாளர்கள் என SNCF சேவைகள் பல பாதிக்கப்பட உள்ளன. போக்குவரத்து பாதிப்பு குறித்த முழுமையான விபரங்கள் பின்னர் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
SUD Rail தொழிற்சங்கம் மே 9, 10, 11 ஆகிய திகதிகளில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதால், மொத்தமாக 4 நாட்கள் போக்குவரத்து பாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.