Paristamil Navigation Paristamil advert login

கால்களுக்கு வலிமை தரும் பயிற்சி

கால்களுக்கு வலிமை தரும் பயிற்சி

1 தை 2023 ஞாயிறு 17:00 | பார்வைகள் : 17080


 இந்த பயிற்சி கால்களுக்கு நல்ல வலிமையும், அழகையும் தரக்கூடியது. மேலும் முதுகுவலி பிரச்சனை உள்ளவர்களுக்க இந்த பயிற்சி மிகவும் உகந்தது. ஆரம்பத்தில் இந்த பயிற்சி செய்வது சற்று கடினமாக இருக்கும். ஆனால் விரைவில் நல்ல பலனைத்தரக்கூடியது. 

 
இந்த பயிற்சி செய்ய முதலில் சுவற்றின் அருகே விரிப்பை விரித்து சுவற்றை ஒட்டி மல்லாந்து படுத்து கொள்ளவும். கால் பதங்களை சுவற்றில் பதியும்படி வைத்து உடலை இடுப்பு வரை படத்தில் உள்ளபடி தூக்கவும். கைககளை தரையில் பதியவைக்கவும். 
 
உங்கள் உடல் எடை முழுவதும் தோள்பட்டையும், கால் பதங்களும் தாங்கியிருக்க வேண்டும். இந்தநிலையில் வலது காலை மடக்கி இடது கால் முட்டி மீது வைக்கவும். இந்த நிலையில் 15 விநாடிகள் இருக்கவும். பின்னர் கால்களை மாற்றி இடது பக்கம் செய்ய வேண்டும். 
 
இவ்வாறு 10 முறை செய்ய வேண்டும். ஆரம்பத்தில் இந்த பயிற்சியை 5 முறை செய்தால் போதுமானது. அதிக எண்ணிக்கையிலும் இந்த பயிற்சியை செய்யலாம். தொப்பை குறையவும் இந்த பயிற்சி சிறந்தது. 

வர்த்தக‌ விளம்பரங்கள்