Paristamil Navigation Paristamil advert login

பாதங்கள் மென்மையாக எளிய வழிகள்

பாதங்கள் மென்மையாக எளிய வழிகள்

1 தை 2023 ஞாயிறு 17:00 | பார்வைகள் : 10667


 ஒரு அகன்ற பாத்திரத்தில் வெந்நீர் (மிதமான சூட்டில்) எடுத்துக் கொள்ளுங்கள். அதில் சில துளிகள் ஷாம்பு, ஒரு கை கல் உப்பு, ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச்சாறு, அரை மூடி டெட்டால் என சேர்த்துக் கலந்து கொள்ளவும். 

 
அந்தப் பாத்திரத்தில் உங்கள் பாதங்கள் முழுமையாக படும்படி 5 நிமிடம் வைத்திருக்க வேண்டும். பின்னர் அப்படியே உங்கள் கால்களை லைட்டாக மசாஜ் செய்யவும். அரைத்த மருதாணி இலை அல்லது மருதாணி பவுடரை எடுத்து பாதங்களில் தடவி அரை மணி நேரம் ஊற வைக்கவும். 
 
பிறகு வெது வெதுப்பான நீரில் பாதங்களை நன்கு கழுவவும். வாரம் ஒருமுறை இப்படிச் செய்தால் பாதங்கள் மென்மையாகும். கால் நகங்களில் உள்ள அழுக்குகள் நீங்கிப் பளிச்சிடும். பாதங்களில் அதிகம் வெடிப்புகள் இருப்பவர்கள், கால்களைத் தேய்த்துக் கழுவ ‘ப்யூமிஸ் ஸ்டோன்’ பயன்படுத்தக் கூடாது. 
 
மேலும் பாத வலிகள் நீங்கும். பாதங்களில் உள்ள அழுக்குகள் நீங்க ஒரு பாத்திரத்தில் மிதமான வெந்நீர் ஊற்ற அதில் சிறிதளவு கல் உப்பு போட்டு உங்கள் கால் பாதங்கள் தண்ணீரில் நன்கு முழ்கும்படி 10 நிமிடம் வைக்கவும். 
 
பின்னர் கால்களை வெளியில் எடுத்து பீர்க்கங்காய் நாரினால் நன்கு அழுத்தி தேய்த்த பின்னர் கால்களை நன்றாக கழுவவும். இவ்வாறு வாரம் இருமுறை செய்து வந்தால் கால்களில் உள்ள செர செரப்பு போய் கால் பாதங்கள் மென்மையாகும்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்