படகில் பயணித்த பிரெஞ்சு பயணியை சுறா தாக்கியது - பாதுகாப்பாக மீட்பு

6 புரட்டாசி 2023 புதன் 18:10 | பார்வைகள் : 10867
மரத்தினால் செய்யப்பட்ட படகு ஒன்றில் பயணித்த பிரெஞ்சு சுற்றுலாப்பயணிஒருவர், சுறா தாக்குதலுக்கு இலக்கானதை அடுத்து, அவர் பாதுகாப்பாகமீட்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் அவுஸ்திரேலியாவில் இடம்பெற்றுள்ளது. அவுஸ்திரேலியாவின் வடக்குபகுதியான கோரல் கடற்பிராந்தியத்தில் இன்று புதன்கிழமையன்று, சிறிய படகில்மூவர் பயணித்துள்ளனர். அவர்களை திடீரென சுறா கூட்டம் சுற்றிவளைத்தது. படகினை தாக்கி, அதை கவிழ்க்க முற்பட்டது. அப்போது அதிஷ்ட்டவசமாக அங்குவருகை தந்த கார்கோ கப்பல் ஒன்று அவர்களை காப்பாற்றியுள்ளது.
படகில் பயணித்த மூவரில் இருவர் இரஷ்யவைச் சேர்ந்தவர்கள் எனவும், ஒருவர்பிரெஞ்சு சுற்றுலாப்பயணி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் பயணித்தஇரு படகும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.