Paristamil Navigation Paristamil advert login

நரை முடிக்கு ஒரு தீர்வு

நரை முடிக்கு ஒரு தீர்வு

1 தை 2023 ஞாயிறு 17:00 | பார்வைகள் : 10015


 முடிக் கால்களில் தோன்றும் மெலனின் பற்றாக்குறையை கட்டுப்படுத்தி, மெலனின் அழிவை தடுத்து, நரைமுடிகளை நெருங்க விடாமல் தடுக்கும் அற்புத மூலிகை கரும்பூலா. முகம் பார்க்கும் கண்ணாடியில் நரைமுடிகளை பார்த்தவுடனேயே வயதாகிவிட்ட உணர்வும், சோர்வும் தோன்றிவிடுவதுண்டு. 

 
 
கரிய நிறமுடையவர்களை விட சிவந்த மற்றும் மாநிறமுடையவர்களுக்கு, வெள்ளை நிற முடி, விரைவில் ஏற்படுகிறது. இந்தியர்களுக்கு, 30 வயதுக்கு மேல், நரைக்கத் துவங்குவதாக, ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆனால் இப்போது, 20 வயதிற்கு முன்பாகவே, சிலருக்கு நரை துவங்கி விடுகிறது. இது இளநரை என்று அழைக்கப்படுகிறது. மனித ரோமத்திலுள்ள மெலனின் என்னும் கரிய நிறப் பொருளானது ரோமத்திற்கு கறுப்பு நிறத்தைக் கொடுக்கிறது. இந்த மெலனின், முடியின் வேர்க் கால்களில் குறையத் துவங்குவதால், கறுப்பு நிறமற்ற முடி முளைக்கத் துவங்குகிறது. 
 
 
மெலனினை உற்பத்தி செய்யும் செல்கள், முடியின் அடியிலும், தோலிலும், கறுப்பு நிறமிகளை சேமித்து வைக்கின்றன. இந்த செல்களின் உற்பத்தி குறைந்து, மெலனின் அற்ற செல்கள் வளர்வதால், நரைமுடி தோன்ற ஆரம்பிக்கிறது. நரைமுடி, முதுமையின் அடையாளமாக கருதப்படுவதால், நரைக்க ஆரம்பித்ததும், வயோதிகத்தை நினைத்து, பயமும், சோர்வும் ஏற்படுகிறது. 
 
 
இதை சரிசெய்ய, முடிக்குச் சாயம் பூசத் துவங்கி விடுகிறோம். அமோனியா, காரியம் கலந்த சாயங்கள், பல கெடுதல்களை ஏற்படுத்துகின்றன. நரைமுடியை வேருடன் பிடுங்குவதால், மெலனின் இல்லாத செல்கள், அருகிலுள்ள முடிகளின் வேர்க்கால்களில் சிதறி, அங்கு பெருகி, மீண்டும் நரைமுடியை அதிகப்படுத்துகின்றன. 
 
 
ஆகவே நரைமுடிகளை பிடுங்காமல், கீழ்பாகம் வரை, வெட்டி மறைத்துக் கொள்வது நல்லது. தைராய்டு குறைபாடு, பி12 வைட்டமின் குறைபாடு, வெண்படை போன்ற தோல் நோய்கள், ஊட்டச்சத்து குறைபாடு, கட்டுப்பாடற்ற சர்க்கரை நோய், புகைப்பழக்கம், புரதச்சத்து குறைபாடு, பரம்பரை ஆகியவை, நரை ஏற்படக் காரணங்களாக அமைகின்றன. 
 
தலையில் பொடுகு அதிகம் தோன்றினால், அவை வேர்க்கால்களை அடைத்து, மெலனின் உற்பத்தியை குறைத்து, நரையை அதிகப்படுத்துகின்றன. தலையை அலசி குளிப்பதற்காக பயன்படுத்தும், சில வேதிப்பொருள் கலந்த வீரியமிக்க ஷாம்புகள் மற்றும் முடி அலசிகளிலுள்ள ஹைட்ரஜன் பெராக்சைடு, வேர்க் கால்களை சேதமடையச் செய்து, கறுப்பு நிறமிகளை அழித்து, நரைமுடிகளை அதிகப்படுத்துகின்றன. 
 
 
புரதச்சத்து மற்றும் இரும்புச்சத்து குறைவினால், முடியின் கறுமை நிறம் மங்கி, செம்பட்டை நிறம் தோன்றுகிறது. நாளடைவில் இதுவே, நரைமுடிக்கு காரணமாக அமைகிறது. நரைமுடி அதிகரிப்பதற்கு, பி.சி.எல்., என்ற ஜீன்கள் காரணமாக இருப்பதாக, அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 
 
 
பெண்களை விட ஆண்களுக்கே, முடி மிக கறுப்பாக காணப்படுகிறது.கரும்பூலாவின் குணம்முடிக் கால்களில் தோன்றும் மெலனின் பற்றாக்குறையை கட்டுப்படுத்தி, மெலனின் அழிவை தடுத்து, நரைமுடிகளை நெருங்க விடாமல் தடுக்கும் அற்புத மூலிகை கரும்பூலா.இந்தச் செடியின் இலைகள் மற்றும் பழங்களில் உள்ள குளோஜிடோனால், பிட்டுலின் மற்றும் பிரிடெலின் வேதிப்பொருட்கள், நரைமுடிகளுக்கு காரணமான மெலனின் அழிவை தடுத்து, கறுப்பு நிறத்தைக் கூட்டி, இளநரை ஏற்படாமல் தடுக்கின்றன. 
 
 
கரும்பூலா பழம் மற்றும் இலைகள், நெல்லிக்காய், மருதோன்றி இலைகள், கறிவேப்பிலை இலைகள், அவுரி இலைகள் ஆகியவற்றை இடித்து, 500 மி.லி., சாறெடுத்துக் கொள்ள வேண்டும். கடுக்காய் தோலை, ஒன்றிரண்டாக இடித்து வைத்துக் கொள்ள வேண்டும். 
 
 
500 மி.லி., தேங்காய் எண்ணெயுடன் சாறு மற்றும் கடுக்காய் தோல் பொடியை கலந்து, கொதிக்க வைத்து, சாறு வற்றியதும் வடிகட்டி, சூடு ஆறியபின், மூடிய பாத்திரத்தில் எடுத்து வைத்து, 15 நாட்கள் சென்றதும், மீண்டும் ஒருமுறை வடிகட்டி, தலையில் தேய்த்து வர, நரைமுடி வராமல் தடுக்கும் மற்றும் இளநரை மாறும். 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்