Paristamil Navigation Paristamil advert login

இஞ்சி தேங்காய் சாதம்

இஞ்சி தேங்காய் சாதம்

2 தை 2023 திங்கள் 17:00 | பார்வைகள் : 9806


 காலையில் வேலைக்கு செல்லும் போதும் சரி, குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் போதும் சரி, வெரைட்டி ரைஸ் தான் செய்வதற்கு எளிமையாக இருக்கும். அத்தகைய கலவை சாதத்தில் பல வெரைட்டிகள் உள்ளன. அதில் ஆரோக்கியமான மற்றும் சுவையான ஒரு கலவை சாதம் தான் இஞ்சி தேங்காய் சாதம். இந்த இஞ்சி தேங்காய் சாதம் செய்வது என்பது மிகவும் ஈஸியானது.  சரி, இப்போது அந்த இஞ்சி தேங்காய் சாதத்தை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்: 

அரிசி - 2 கப் 

இஞ்சி - 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது) 

தேங்காய் பால் - 1/2 கப்

பூண்டு - 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது) 

வெங்காயம் - 1 (நறுக்கியது) 

மிளகு தூள் - தேவையான அளவு

 துளசி - 6 இலைகள் 

வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் 

உப்பு - தேவையான அளவு 


செய்முறை: 

முதலில் ஒரு பேனில் வெண்ணெயை போட்டு, இஞ்சி, பூண்டு மற்றும் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். பின் அதில் அரிசி, தேங்காய் பால், 4 கப் தண்ணீர், உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து கிளறி, நன்கு கொதிக்க விட வேண்டும். 

 

பின்பு அதில் துளசி இலைகளைப் போட்டு கிளறி, தீயை குறைவில் வைத்து, தட்டு கொண்டு மூடி 15-20 நிமிடம் வேக வைத்து இறக்கினால், தண்ணீர் முழுவதும் வற்றி, சூப்பரான சுவையில் இஞ்சி தேங்காய் சாதம் ரெடியாக இருக்கும்.


எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்