உருளைக்கிழங்கு சீரக வறுவல்
2 தை 2023 திங்கள் 17:00 | பார்வைகள் : 9818
மதிய வேளையில் சாதத்துடன் பொரியல் அல்லது வறுவல் போன்றவை இருந்தால் தான் சாப்பிடுவீங்களா? இன்றைக்கு என்ன செய்வதென்று தெரியவில்லையா? குறிப்பாக உருளைக்கிழங்கு பிரியரா? அப்படியெனில் ஒரு சூப்பரான ரெசிபி உள்ளது. அது தான் உருளைக்கிழங்க சீரக வறுவல். இதனை பேச்சுலர்கள் கூட செய்யலாம். அந்த அளவில் இது எளிமையான செய்முறையைக் கொண்டது. சரி, இப்போது அந்த உருளைக்கிழங்கு சீரக வறுவலின் செய்முறையைப் பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு - 5 (வேக வைத்து, தோலுரித்து நறுக்கியது)
சீரகம் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1/2 டீஸ்பூன்
இஞ்சி - 1 டேபிள் ஸ்பூன் (துருவியது)
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
மல்லி தூள் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
மாங்காய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்ன
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம் போட்டு தாளித்து, பெருங்காயத் தூள், இஞ்சி, பச்சை மிளகாய் ஆகியவற்றைப் போட்டு, தீயை குறைவில் சைத்து வதக்க வேண்டும்
பின்பு மல்லி தூள், மஞ்சள் தூள், மாங்காய் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். பிறகு அதில் வேக வைத்து நறுக்கி வைத்திருக்கும் உருளைக்கிழங்கை சேர்த்து நன்கு மசாலா உருளைக்கிழங்கில் சேரும் வரை கிளறி, இறக்கி விட வேண்டும். இப்போது சூப்பரான உருளைக்கிழங்கு சீரக வறுவல் ரெடி!!!