வேர்க்கடலை சுண்டல்
2 தை 2023 திங்கள் 17:00 | பார்வைகள் : 9677
பொதுவாக விநாயகர் சதுர்த்திக்கு கொண்டைக்கடலை சுண்டல் தான் செய்வார்கள். ஏனெனில் விநாயகருக்கு சுண்டல் என்றால் மிகவும் பிடிக்கும். ஆனால் இந்த வருட விநாயகர் சதுர்த்திக்கு, சற்று வித்தியாசமாக வேர்க்கடலைக் கொண்டு சுண்டல் செய்து படைக்கலாம். இங்கு அந்த வேர்க்கடலை சுண்டலின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து அவற்றை முயற்சி செய்து பாருங்கள்.
தேவையான பொருட்கள்:
பச்சை வேர்க்கடலை - 1 கப்
தேங்காய் - 1/4 கப் (துருவியது)
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்ழுன்
வரமிளகாய் - 4
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் வேர்க்கடலையை நீரில் 2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் வேர்க்கடலையை கழுவிப் போட்டு, போதிய அளவு தண்ணீர் மற்றும் சிறிது உப்பு சேர்த்து, மூடி 2-3 விசில் விட்டு இறக்க வேண்டும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய், கறிவேப்பிலை மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து தாளிக்க வேண்டும்.
பிறகு வேக வைத்துள்ள வேர்க்கடலை மற்றும் உப்பு சேர்த்து கிளறி, துருவி வைத்துள்ள தேங்காயை போட்டு 2 நிமிடம் பிரட்டி இறக்கினால், சூப்பரான வேர்க்கடலை சுண்டல் ரெடி!!!