உருளைக்கிழங்கு வறுவல்
2 தை 2023 திங்கள் 17:00 | பார்வைகள் : 10005
யாருக்கு தான் உருளைக்கிழங்கு பிடிக்காது? பெரும்பாலான வீடுகளில் உருளைக்கிழங்கு இல்லாமல் மதிய உணவு இருக்காது. அந்த அளவில் உருளைக்கிழங்கிற்கு நிறைய பிரியர்கள் உண்டு. மேலும் உருளைக்கிழங்கை பலவாறு சமைக்கலாம். இங்கு எளிமையான ஒரு உருளைக்கிழங்கு வறுவலை கொடுத்துள்ளோம். இதனை பேச்சுலர்கள் கூட முயற்சிக்கலாம். இது மதிய வேளையில் சாதத்திற்கு ஏற்ற ஒரு அருமையான சைடு டிஷ். சரி, இப்போது அந்த உருளைக்கிழங்கு வறுவலைப் பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு - 3-4
வெங்காயம் - 2 (நறுக்கியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
பூண்டு - 3-4 பல் (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மல்லி தூள் - 1 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் உருளைக்கிழங்கை நன்கு கழுவிக் கொள்ள வேண்டும். பின் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் கழுவிய உருளைக்கிழங்கைப் போட்டு தண்ணீர் ஊற்றி, 2-3 விசில் விட்டு இறக்கக் கொள்ள வேண்டும்.
விசிலானது போனதும், குக்கரைத் திறந்து, உருளைக்கிழங்கின் தோலை நீக்கிவிட்டு, துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம் சேர்த்து தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் பூண்டு சேர்த்து 4-5 நிமிடம் வதக்க வேண்டும்.
பின் உப்பு மற்றம மஞ்சள் தூள் சேர்த்து கிளறி விட வேண்டும். வெங்காயமானது நன்கு வதங்கியதும், தக்காளியைப் போட்டு 2 நிமிடம் வதக்கி விட வேண்டும்.
அடுத்து மிளகாய் தூள், மல்லி தூள், சீரகப் பொடி சேர்த்து பிரட்டி, உருளைக்கிழங்கை சேர்த்து, மசாலா நன்கு உருளைக்கிழங்குடன் சேரும் வரை கிளறி விட்டு, இறக்கினால், சூப்பரான உருளைக்கிழங்கு வறுவல் ரெடி!!!