உருளைக்கிழங்கு முட்டைகோஸ் பொரியல்
2 தை 2023 திங்கள் 17:00 | பார்வைகள் : 10025
வெள்ளிக்கிழமை என்றால் பெரும்பாலான வீடுகளிலும் சாம்பார், பொரியல், அப்பளம் செய்து சாப்பிடுவோம். அப்படி பொரியல் செய்யும் போது, இந்த மாதம் முட்டைக்கோஸ் சீசன் என்பதால், முட்டைக்கோஸ் மற்றும் அனைவருக்கும் பிடித்த உருளைக்கிழங்கு கொண்டு அருமையான முறையில் ஈஸியான பொரியல் செய்யலாம்.
இப்போது அந்த உருளைக்கிழங்கு முட்டைக்கோஸ் பொரியலை எப்படி செய்வதென்று பார்ப்போம்.
உருளைக்கிழங்கு முட்டைகோஸ் பொரியல்
தேவையான பொருட்கள்:
முட்டைகோஸ் - 1 (சிறியது மற்றும் நறுக்கியது)
உருளைக்கிழங்கு - 3 (நறுக்கியது)
வெங்காயம் - 1 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
தக்காளி - 2 (நறுக்கியது)
சீரகம் - 2 டீஸ்பூன்
மல்லி தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் பேஸ்ட் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
சீரகம் - 1 டீஸ்பூன்
பிரியாணி இலை - 1
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், பிரியாணி இலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின்னர் அதில் வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் பச்சை மிளகாய் பேஸ்ட் சேர்த்து, வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.
அடுத்து உருளைக்கிழங்கு, உப்பு சேர்த்து 3-4 நிமிடம் குறைவான தீயிலேயே வதக்க வேண்டும்.
பின் நறுக்கி வைத்துள்ள தக்காளி, சீரகப் பொடி, மல்லி தூள், மஞ்சள் தூள் சேர்த்து 3 நிமிடம் கிளறி விட வேண்டும்.
பின்பு நறுக்கி வைத்துள்ள முட்டைக்கோஸை சேர்த்து நன்கு பிரட்டி, உப்பு, கரம் மசாலா சேர்த்து 5-6 நிமிடம் குறைவான தீயில் வதக்க வேண்டும்.
முட்டைக்கோஸில் இருந்து தண்ணீர் வெளிவர ஆரம்பிக்கும் போது, தட்டு கொண்டு மூடி 10 நிமிடம் குறைவாக தீயிலேயே வேக வைக்க வேண்டும்.
முட்டைக்கோஸானது நன்கு வெந்ததும், அதனை இறக்கி, அதன் மேல் கொத்தமல்லியை தூவி அலங்கரித்தால், சுவையான உருளைக்கிழங்கு முட்டைக்கோஸ் பொரியல் ரெடி!!!