Paristamil Navigation Paristamil advert login

உருளைக்கிழங்கு பஜ்ஜி

உருளைக்கிழங்கு பஜ்ஜி

2 தை 2023 திங்கள் 17:00 | பார்வைகள் : 9874


 குளிர்காலத்தில் மாலையில் நன்கு சூடாகவோ அல்லது காரமாகவோ ஏதேனும் சாப்பிட வேண்டுமென்று தோன்றும். அப்போது வீட்டில் உருளைக்கிழங்கு இருந்தால், அவற்றை பஜ்ஜி செய்து சாப்பிட்டால், சூப்பராக இருக்கும். இங்கு அந்த உருளைக்கிழங்கு பஜ்ஜியின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது.அதனைப் படித்து அவற்றை மாலையில் செய்து சாப்பிட்டு மகிழுங்கள். அதிலும் இந்த பஜ்ஜியை தேங்காய் சட்னியுடன் சாப்பிட்டால், இன்னும் அருமையாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு - 3 

கடலை மாவு - 1 1/2 கப்

தண்ணீர் - 1 கப்

மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்

பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை

பேக்கிங் சோடா - 2 சிட்டிகை

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு

 

செய்முறை:

முதலில் உருளைக்கிழங்கை தோலுரித்து, உப்பு கலந்த நீரில் போட்டு, 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

பின்னர் நீரை முற்றிலும் வடித்துவிட்டு, அதனை வட்டமாக நறுக்கி கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு பொளலில் கடலை மாவு, மிளகாய் தூள், கரம் மசாலா, பேக்கிங் சோடா, பெருங்காயத் தூள் மற்றும் உப்பு சேர்த்து கிளறி, மெதுவாக தண்ணீர் ஊற்றி, பஜ்ஜி மாவு பதத்திற்கு கெட்டி சேராதவாறு கலந்து கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உருளைக்கிழங்கை ஒவ்வொரு துண்டாக எடுத்து, கலந்து வைத்துள்ள பஜ்ஜி மாவில் நன்கு பிரட்டி, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.

இதேப் போன்று அனைத்து உருளைக்கிழங்கையும் பொரித்து எடுத்தால், சுவையான உருளைக்கிழங்கு பஜ்ஜி ரெடி!!!

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்