Paristamil Navigation Paristamil advert login

ஓட்ஸ் இட்லி

ஓட்ஸ் இட்லி

2 தை 2023 திங்கள் 17:00 | பார்வைகள் : 9743


 காலையில் ஓட்ஸ் சாப்பிட்டால், உடல் நன்கு ஆரோக்கியமாக இருக்கும். ஏனெனில் ஓட்ஸில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. எனவே அந்த ஓட்ஸை எப்போதும் ஒரே மாதிரி பால் சேர்த்து சாப்பிடுவதற்கு பதிலாக, அதனை இட்லிகளாக செய்து சாப்பிடலாம். மேலும் இது மிகவும் எளிமையான ரெசிபி. காலையில் சமைப்பதற்கு ஈஸியாக இருக்கும்.சரி, இப்போது அந்த ஓட்ஸ் இட்லியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:

ஓட்ஸ் - 2 கப்

தயிர் - 1/2 லிட்டர்

கடுகு - 1 டேபிள் ஸ்பூன்

உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்

கடலைப் பருப்பு - 1/2 டேபிள் ஸ்பூன்

எண்ணெய் - 1/2 டேபிள் ஸ்பூன்

பச்சை மிளகாய் - 2 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

துருவிய கேரட் - 1 கப்

கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)

மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்

உப்பு - 2 டீஸ்பூன்

 

செய்முறை:

 

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் ஓட்ஸை போட்டு, பொன்னிறமாக வறுத்து, பின் மிக்ஸியில் போட்டு பொடி செய்து, ஒரு பாத்திரத்தில் போட்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.

பின் பச்சை மிளகாய், கொத்தமல்லி மற்றும் கேரட் சேர்த்து வதக்கி, மஞ்சள் தூள் சேர்த்து 1 நிமிடம் கிளறி இறக்கி, அதனை பொடி செய்த ஓட்ஸ் உடன் சேர்க்க வேண்டும்.

பிறகு அதில் தயிர் ஊற்றி, இட்லி மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும். முக்கியமாக இதில் தண்ணீரை சேர்க்கக்கூடாது.

பின்னர் அந்த மாவை இட்லிகளாக ஊற்றி எடுத்தால், சுவையான ஓட்ஸ் இட்லி ரெடி!!!

குறிப்பு:

இட்லிகளாக ஊற்றும் போது, இட்லி தட்டில் எண்ணெய் தடவிக் கொள்ள வேண்டும். இதனால் இட்லிகளை ஈஸியாக எடுக்கலாம்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்