Paristamil Navigation Paristamil advert login

மின்சார கட்டணம் 10% சதவீதத்தால் அதிகரிக்க வாய்ப்பு

மின்சார கட்டணம் 10% சதவீதத்தால் அதிகரிக்க வாய்ப்பு

15 புரட்டாசி 2023 வெள்ளி 09:50 | பார்வைகள் : 10172


2024 ஆம் ஆண்டில் பிரான்சில் மின்சாரக் கட்டணம் 10  சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்சின் எரிசக்தி அமைச்சர் Agnès Pannier-Runacher இதனை அறிவித்துள்ளார். 2024 ஆம் ஆண்டு முழுவதுமாக 10% சதவீத விலை அதிகரிப்பு மட்டுமே பதிவாகும் என அவர் தெரிவித்தார். அதேவேளை குறித்த அளவுக்கு அதிகமாக விலை அதிகரிப்பு இடம்பெறாது என்பதையும் உறுதி செய்தார்.

விலை அதிகரிக்கப்படும் அபாயம் உள்ளபோதும், நிலையான தொகையாக இது இருக்கும் எனவும், 2024 ஆம் ஆண்டில் ஐரோப்பிய நாடுகளில் மிக குறைந்த மின்சார கட்டணம் கொண்ட நாடாகவும் பிரான்ஸ் இருக்கும் எனவும் அமைச்சர் தெரிவித்தார். 

விலையேற்றம் அடிப்படையானதும் முக்கியமானதுமான பிரச்சனை. பிரான்சுக்கு வெளியே இருந்து வாங்கப்படும் பொருட்களுக்கு நாம் விலை நிர்ணயம் செய்ய முடியாது. போர்த்துக்கல் மற்றும் ஸ்பெயின் போன்ற நாடுகளோடு ஒப்பிடுகையில் பிரான்சில் மின்சார கட்டணம் மிகக்குறைவு எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்