Paristamil Navigation Paristamil advert login

கர்ணனாக களமிறங்கும் சூர்யா...?

கர்ணனாக களமிறங்கும் சூர்யா...?

17 புரட்டாசி 2023 ஞாயிறு 15:36 | பார்வைகள் : 2120


சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கும் கங்குவா திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதை தொடர்ந்து வாடிவாசல், சூர்யா 43, ரோலக்ஸ், இரும்பு கை மாயாவி என தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிக்க இருக்கிறார். சமீபத்தில் இயக்குனர் சந்தூ மொண்டேட்டி உடன் கூட்டணி அமைக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.இந்நிலையில் இந்தியில் ராகேஷ் ஓம் பிரகாஷ் இயக்கும் ‘கர்ணா’ படத்தில் நடிக்க உள்ளதாக தற்போதைய தகவல்கள் கிடைத்துள்ளது. 

இதன்மூலம் சூர்யா பாலிவுட்டில் அறிமுகமாக இருக்கிறார். இவர்களின் கூட்டணியில் உருவாகும் இந்த படம் மகாபாரத கதையை மையமாகக் கொண்டு உருவாக இருப்பதாக தெரியவந்துள்ளது. அதாவது கர்ணன் கதாபாத்திரத்தில் சூர்யா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இப்படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் உருவாக உள்ளது. இதன் படப்பிடிப்புகள் அடுத்த ஆண்டு தொடங்க உள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வர்த்தக‌ விளம்பரங்கள்