மக்ரோன் இன்று என்ன சொல்லப் போகின்றார்?
24 புரட்டாசி 2023 ஞாயிறு 13:16 | பார்வைகள் : 8654
இன்று இரவு ஒளிபரப்பப்பட உள்ள எமானுவல் மக்ரோனின் செவ்வியில் என்னென்ன விடயங்கள் பேசப் போகின்றார் என்ற கேள்வி அரசியல் அவதானிகளிடம் எழுந்துள்ளது.
ஆரம்பத்தில் மாரசெய் நகரிற்கு வந்த போப்பாண்டவர் பற்றியும் பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்ள்சின் விஜயம் பற்றியும் பெரிதளவில் எமானுவல் மக்ரோன் பேச உள்ளார்.
ஆனால் இதைப்பற்றிப் பேசுவதற்காக மட்டும் எதற்காக செவ்வி?
எனவே செவ்வியின் முக்கிய வியடமாக 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டமும் அதற்கான வாக்கெடுப்பு பற்றியும் இருக்கும்.
பிரான்சின் பணவீக்கமும், கடனும் 3.000 பில்லியன்களை (3.000 மில்லியார் = 3.000.000 மில்லியன்கள்) ஆகும். இதில் உள்நாட்டு உற்பத்தி வீழ்ச்சியின் பங்கும் உள்ளது. அதேநேரம் ஐரோப்பாவின் கடன் சுமையின் பகுதியும், பிரான்சின் மேல் வீழ்ந்துள்ளது. உக்ரைனிற்கு அள்ளிக் கொடுத்த பணமும் பிரெஞ்சுமக்கள் தலையிலேயே வீழ்ந்துள்ளது.
எனவே இந்த வரவு செலவுத் திட்டமும், இன்னமும் மக்களின் கொள்வனவுத் திறனை கேள்விக்குறியாக்க உள்ளது.
இதனைச் சமாளிக்கும் விதமாக, இன்னமும் மக்களை ஏமாற்றும் திட்ட அறிக்கை பற்றியும், அதனைத் தொடர்ந்து எப்போதும் போல் சுற்றுப்புறச்சூழல் பற்றியும், இன்றைய செவ்வி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதனுடன் எதிர்வரும் செனட்சபைத் தேர்தல் பற்றியும் மக்ரோனின் அக்கறை செவ்வியில் இருக்கும்.