Paristamil Navigation Paristamil advert login

மிளகு அடை

மிளகு அடை

2 தை 2023 திங்கள் 17:00 | பார்வைகள் : 9362


 காலை வேளையில் நன்கு காரமாகவும், அதே சமயம் உடலுக்கு ஆரோக்கியமானதாகவும் இருக்கும் ரெசிபியை சமைத்து சாப்பிட ஆசையா? அப்படியானால் மிளகு அடையை செய்து சாப்பிடுங்கள். அதிலும் இந்த அடையை தேங்காய் சட்னி தொட்டு சாப்பிட்டால், அதன் சுவையே தனி தான். இங்கு அந்த மிளகு அடையின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து பாருங்கள். 

 
தேவையான பொருட்கள்: 
 
இட்லி அரிசி - 1 கப் 
பச்சரிசி - 1/2 கப் 
உளுத்தம் பருப்பு - 1/2 கப் 
கடலைப்பருப்பு - 1 டேபிள் ஸ்பூன் 
துவரம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன் 
மிளகு - 1 டேபிள் ஸ்பூன் 
சீரகம் - 1 டேபிள் ஸ்பூன் 
துருவிய தேங்காய் - 1/2 கப் 
நறுக்கிய தேங்காய் துண்டுகள் - 2 டேபிள் ஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு 
எண்ணெய் - தேவையான அளவு 
 
செய்முறை: 
 
முதலில் அரிசி மற்றும் பருப்புக்களை நீரில் 4 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதனை நன்கு கழுவி, கிரைண்டரில் போட்டு, அத்துடன், மிளகு, சீரகம், தேங்காய் மற்றும் உப்பு சேர்த்து கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும். 
 
பிறகு ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் தடவி, பின் அரைத்து வைத்துள்ள மாவை தோசைகளாக ஊற்றி, அதன் மேல் சிறிது தேங்காய் துண்டுகளை தூவி, எண்ணெய் ஊற்றி முன்னும் பின்னும் வேக வைத்து எடுத்தால், மிளகு அடை ரெடி!!!
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்