Paristamil Navigation Paristamil advert login

தயிர் ரவா தோசை

தயிர் ரவா தோசை

2 தை 2023 திங்கள் 17:00 | பார்வைகள் : 9661


 நீங்கள் டயட்டில் இருக்கிறீர்களா? அப்படியானால் தயிர் ரவா தோசை மிகவும் சிறந்த காலை உணவாகும். ஏனெனில் இந்த தயிர் ரவா தோசையானது எண்ணெய் பயன்படுத்தாமல் செய்யும் ரெசிபியாகும். எனவே டயட்டில் இருப்போருக்கு இது மிகவும் சிறந்த காலை உணவு. மேலும் பேச்சுலர்களும் காலையில் முயற்சி செய்து சமைத்து சாப்பிடலாம். இங்கு அந்த தயிர் ரவா தோசை ரெசிபியை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். அதைப் பார்போமா!!! 

 
தேவையான பொருட்கள்: 
 
அரிசி மாவு - 1 கப் 
ரவை - 1 கப் 
தயிர் - 3 டேபிள் ஸ்பூன் 
பச்சை மிளகாய் பேஸ்ட் - 2 டீஸ்பூன் 
வெங்காயம் - 1/2 கப் (பொடியாக நறுக்கியது) 
தக்காளி - 3 (அரைத்தது) 
உப்பு - தேவையான அளவு 
 
செய்முறை: 
 
முதலில் ஒரு பாத்திரத்தில் ரவை, தயிர், உப்பு மற்றும் அரிசி மாவு சேர்த்து நன்கு தோசை மாவு பதத்திற்கு எண்ணெய் ஊற்றி நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின்னர் அதனை 6 நிமிடம் மூடி வைத்து வேக வைத்த வேண்டும். 
 
பின்பு அதில் அரைத்த தக்காளி, வெங்காயம், உப்பு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பிறகு ஒரு நாண்-ஸ்டிக் பேனை அடுப்பில் வைத்து காய்ந்ததும், கலந்து வைத்துள்ள மாவை எண்ணெய் சுடாமல் ஊற்றி, முன்னும் பின்னும் வேக வைத்து எடுத்தால் தயிர் ரவா தோசை ரெடி!!!
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்