பாதாம் பூரி
2 தை 2023 திங்கள் 17:00 | பார்வைகள் : 9796
குழந்தைகளுக்கு மாலையில் நல்ல சுவையான அதே சமயம் இனிப்பான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க நினைத்தால், பாதாம் பூரி செய்து கொடுங்கள். இந்த ரெசிபி செய்வது மிகவும் ஈஸியானது மட்டுமல்லாமல், வீட்டில் உள்ளோர் அனைவருமே விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.
சரி, இப்போது அந்த பாதாம் பூரியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
மைதா - 1 1/2 கப்
பாதாம் - 1/2 கப் (பேஸ்ட்)
சர்க்கரை - 3 1/2 கப்
அரிசி மாவு - 1 1/4 கப்
பால் - 100 மிலி
குங்குமப்பூ - 1 கிராம்
ஏலக்காய் - 1 டீஸ்பூன்
நெய் - 25 மிலி
எண்ணெய் - 1 கப்
தண்ணீர் - 1 கப்
செய்முறை:
முதலில் ஒரு பௌலில் அரிசி மாவு, மைதா, பால் மற்றும் பாதாம் பேஸ்ட் சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி, கொதிக்க வைத்து, அதில் குங்குமப்பூ, சர்க்கரை மற்றும் ஏலக்காய் சேர்த்து ஸ்பூன் கொண்டு கிளறி, சர்க்கரை பாகு செய்து கொள்ள வேண்டும்.
பிறகு பிசைந்து வைத்துள்ள மாவை, சிறு உருண்டைகளாக உருட்டி, பின் அதனை சிறு பூரிகளாக தேய்த்துக் கொள்ள வேண்டும்.
அப்படி தேய்க்கும் போது, ஒவ்வொன்றையும் முக்கோண வடிவில் மடித்துக் கொள்ள வேண்டும்.
பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேய்த்து வைத்துள்ள பூரிகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
இறுதியில் அந்த பூரிகளை சர்க்கரை பாகுவில் போட்டு, 10 நிமிடம் ஊற வைத்து, பின் அதனை தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்து பரிமாறினால், பாதாம் பூரி ரெடி!!!