சுவையான ஓட்ஸ் பொங்கல்
2 தை 2023 திங்கள் 17:00 | பார்வைகள் : 9644
பலரது காலை உணவு என்னவென்று பார்த்தால் அது ஓட்ஸாகத் தான் இருக்கும். அத்தகைய ஓட்ஸை எப்போதும் ஒரே மாதிரி சாப்பிட பிடிக்காது. அவ்வப்போது அதனை பலவாறு சமைத்து சாப்பிட வேண்டும். ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை ஓட்ஸைக் கொண்டு செய்யக்கூடிய பொங்கல் ரெசிபியை உங்களுக்காக கொடுத்துள்ளது.
அதைப் படித்து அதனை காலையில் செய்து சாப்பிட்டு மகிழுங்கள். சரி, இப்போது அந்த ஓட்ஸ் பொங்கல் ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
ஓட்ஸ் - 1/2 கப்
பாசிப்பருப்பு - 1/4 கப்
முந்திரி - 5
தண்ணீர் - 3/4 - 1 கப்
நெய் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
எண்ணெய் - 1 டீஸ்பூன்
மிளகு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
பச்சை மிளகாய் - 1
இஞ்சி - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் பாசிப்பருப்பை நன்கு கழுவி குக்கரில் போட்டு, 3/4 கப் தண்ணீர் ஊற்றி, அடுப்பில் வைத்து, 4-5 விசில் விட்டு இறக்க வேண்டும். மற்றொரு அடுப்பில் முந்திரியை நெய்யில் போட்டு வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின் வேக வைத்துள்ள பாசிப்பருப்பை நன்கு மசித்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின்பு அதில் 1 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும்.
தண்ணீரானது கொதிக்க ஆரம்பிக்கும் போது, அதில் ஓட்ஸ் மற்றும் வேக வைத்து மசித்து வைத்துள்ள பாசிப்பருப்பை சேர்த்து கிளறி, 2-3 நிமிடம் நன்கு வேக வைக்க வேண்டும்.
ஓட்ஸானது நன்கு வெந்ததும், அதில் முந்திரியை சேர்த்து கிளறி இறக்கினால், ஓட்ஸ் பொங்கல் ரெடி!!!