Paristamil Navigation Paristamil advert login

ரவா முறுக்கு

ரவா முறுக்கு

2 தை 2023 திங்கள் 17:00 | பார்வைகள் : 10112


 முறுக்குகளில் பல வெரைட்டிகள் உள்ளன. மேலும் ஒவ்வொரு முறுக்கும் தனித்தனி சுவையைக் கொண்டவையாகயே இருக்கும். அந்த வகையில் வித்தியாசமான சுவையைக் கொண்ட முறுக்கு தான் ரவா முறுக்கு. அதிலும் இந்த முறுக்கு தீபாவளி பண்டிகைக்கு செய்யும் பலகாரங்களில் ஒன்றாக இருந்தால் சூப்பராக இருக்கும்.

அதுமட்டுமின்றி, இது செய்வதற்கு மிகவும் ஈஸியாகவும் இருக்கும். இங்கு அந்த ரவா முறுக்கை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து தீபாவளிக்கு செய்து சுவைத்து மகிழுங்கள்.
 
தேவையான பொருட்கள்:
 
அரிசி மாவு/இடியாப்ப மாவு - 1/2 கப்
ரவை - 1/4 கப்
வெண்ணெய் - 1/2 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
எள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
 
செய்முறை:
 
முதலில் ரவையை மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும். பின் வாணலியில் தண்ணீரை ஊற்றி அடுப்பில் வைத்து, கொதிக்க வைக்க வேண்டும்.
 
நீரானது நன்கு கொதித்ததும், அதில் ரவையை சேர்த்து நன்கு கட்டி சேராதவாறு கிளறி விட வேண்டும். ரவையானது வெந்ததும் அடுப்பை அணைத்து சிறிது நேரம் குளிர வைத்து, பின் அதில் அரிசி மாவு, மிளகாய் தூள், வெண்ணெய், எள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, லேசாக தண்ணீர் தெளித்து நன்கு மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும்.
 
பின்பு ஒரு தட்டில் துணியை அல்லது பிளாஸ்டிக் கவரை விரித்து முறுக்கு அச்சில் சிறிது மாவை வைத்து, தட்டின் மேலே முறுக்குகளாக பிழிய வேண்டும்.
 
இறுதியில் ஒரு வாணலியில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, எண்ணெயானது நன்கு காய்ந்ததும், அதில் பிழிந்து வைத்துள்ள முறுக்கை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், ரவா முறுக்கு ரெடி!!!
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்