Paristamil Navigation Paristamil advert login

தக்காளி சட்னி

தக்காளி சட்னி

2 தை 2023 திங்கள் 17:00 | பார்வைகள் : 10916


 காலையில் இட்லி, தோசை போன்றவற்றிற்கு சிம்பிளான சைடு டிஷ் செய்து சாப்பிட நினைத்தால், வெங்காயம், பூண்டு எதுவும் சேர்க்காமல் வெறும் தக்காளியைக் கொண்டே அருமையான சட்னி செய்யலாம். குறிப்பாக இந்த சட்னி பேச்சுலர்களுக்கு ஏற்றவாறு செய்வதற்கு மிகவும் சிம்பிளாக இருக்கும்.இங்கு அந்த சிம்பிளான தக்காளி சட்னியை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்துப் பாருங்கள்.

 
தேவையான பொருட்கள்:
 
தக்காளி - 3
இஞ்சி - 1 இன்ச்
மிளகு - 1/2 டீஸ்பூன்
கிராம்பு - 2
வரமிளகாய் - 3
கடுகு - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
 
செய்முறை:
 
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1/2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக தாளிக்க வேண்டும்.
 
பின் அதில் வரமிளகாய், கிராம்பு, மிளகு, பெருங்காயத் தூள் மற்றும் இஞ்சி சேர்த்து பொன்னிறமாக வதக்கி விட வேண்டும்.
 
பின்பு அதில் தக்காளி மற்றும் உப்பு சேர்த்து, தக்காளி மென்மையாகும் வரை 6-7 நிமிடம் குறைவான தீயில் வதக்கி இறக்கி, குளிர வைக்க வேண்டும்.
 
பிறகு அதனை மிக்ஸியில் போட்டு, நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
இறுதியில் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, வெந்தயம், வரமிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பின் அதில் அரைத்து வைத்துள்ள தக்காளி சட்னியை ஊற்றி, 3-4 நிமிடம் குறைவான தீயில் கிளறி இறக்கினால், தக்காளி சட்னி ரெடி!!!

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்