முள்ளங்கி பொரியல்
2 தை 2023 திங்கள் 17:00 | பார்வைகள் : 11062
முள்ளங்கி சாப்பிட்டால் உடலில் இருந்து வாய்வு வெளிவந்து கொண்டே இருக்கும் என்று பலரும் அதனை சாப்பிட மாட்டார்கள். ஆனால் முள்ளங்கியை சமைத்து சாப்பிட்டால், அதன் சுவை அருமையாக இருக்கும் என்பது தெரியுமா? அதிலும் அதனை சாம்பார் செய்து சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும். அதேப்போன்று பொரியல் செய்து சாப்பிட்டாலும் நன்றாக இருக்கும்.இங்கு முள்ளங்கி பொரியலை எப்படி செய்வதென்று எளிமையான செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்துப் பாருங்கள்.
தேவையான பொருட்கள்:
முள்ளங்கி - 1
தேங்காய் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
துருவிய தேங்காய் - 1/2 கப்
செய்முறை:
முதலில் முள்ளங்கியின் தோவை சீவி விட்டு, பின் அதனை துருவிக் கொள்ள வேண்டும்.
பின்னர் தேங்காயை மிக்ஸியில் போட்டு ஒருமுறை அரைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, சீரகம், உளுத்தம் பருப்பு சேர்த்து தாளித்து, பின் துருவிய முள்ளங்கி மற்றும் உப்பு சேர்த்து 8-10 நிமிடம் நன்கு முள்ளங்கி வேகும் வரை வதக்க வேண்டும்.
பின்பு அதில் மிளகாய் தூள், சீரகப் பொடி, மஞ்சள் தூள் சேர்த்து 2 நிமிடம் பிரட்டி, பின் தேங்காயை சேர்த்து 2-3 நிமிடம் பிரட்டி இறக்கினால், முள்ளங்கி பொரியல் ரெடி!!!