Paristamil Navigation Paristamil advert login

கனடாவில் கொலைக் குற்றச்சாட்டு தொடர்பில் இரு சகோதரர்கள் கைது

கனடாவில் கொலைக் குற்றச்சாட்டு தொடர்பில் இரு சகோதரர்கள் கைது

20 வைகாசி 2024 திங்கள் 09:38 | பார்வைகள் : 5118


கனடாவின் மொன்றியாலில் இரண்டு சகோதரர்கள் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

27 வயதான நபர் ஒருவரை கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

20 மற்றும் 18 வயதான ச்சாட் மற்றும் ஜெய்டன் பினேல் ஆகிய சகோதரர்கள் மீது இவ்வாறு கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

கத்தி குத்துக்கு இலக்கான நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தார்.

மொன்றியாலில் இந்த ஆண்டில் இடம்பெற்ற 12 ம் படுகொலைச் சம்பவம் இதுவெனத் தெரிவிக்கப்படுகின்றது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்