Paristamil Navigation Paristamil advert login

மூக்குத்தி அம்மன் 2 - இயக்குனர் யார்?

மூக்குத்தி அம்மன் 2 - இயக்குனர் யார்?

16 ஆடி 2024 செவ்வாய் 09:07 | பார்வைகள் : 1467


ஆர்ஜே பாலாஜி, என்ஜே சரவணன் இயக்கத்தில் நயன்தாரா, ஆர்ஜே பாலாஜி, ஊர்வசி மற்றும் பலர் நடிப்பில் 2020ம் ஆண்டு ஓடிடி தளத்தில் வெளியான படம் 'மூக்கத்தி அம்மன்'. பக்தி கலந்த நகைச்சுவைப் படமாக வெளிவந்த இந்தப் படத்தை ரசிகர்கள் வரவேற்று ரசித்தனர். கொரோனா தாக்கத்தால் தியேட்டர்களில் வெளியாகாமல் போனது. தியேட்டர்களில் வந்திருந்தால் நல்ல வசூலைக் கொடுத்திருக்கும்.

இந்நிலையில் 'மூக்குத்தி அம்மன் 2' என இதன் இரண்டாம் பாகம் பற்றிய ஒரு அறிவிப்பை படத் தயாரிப்பு நிறுவனம் கடந்த வாரம் சிறு வீடியோ ஒன்றுடன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. முதல் பாகத்தின் போஸ்டர், டைட்டில் கிராபிக்ஸ் ஆகியவற்றுடன் கூடுதலாக '2' என்பதை மட்டும் சேர்த்து சிம்பிளாக வெளியானது அந்த வீடியோ.

நயன்தாரா நடிக்கும் என்பது மட்டும்தான் அந்த அறிவிப்பில் இருந்தது. படத்தின் இயக்குனர் யார், இசையமைப்பாளர் யார், மற்ற நடிகர்கள் யார் என்று எதுவுமே இல்லை. பொதுவாக ஒரு படம் பற்றிய அறிவிப்பு என்றால் இயக்குனர் பெயர் கண்டிப்பாக இருக்கும். ஆனால், இந்த அறிவிப்பில் எதுவுமே இல்லாமல் இருந்தது.

இது குறித்து கோலிவுட்டில் விசாரித்த போது படத்தின் இயக்குனர் யார் என்றெல்லாம் இதுவரை முடிவு செய்யவேயில்லை. 'மூக்குத்தி அம்மன்' முதல் பாகத்தை இணைந்து இயக்கிய ஆர்ஜே பாலாஜி 'மாசாணி அம்மன்' என்ற படத்தை இயக்க உள்ளார். அதற்குப் போட்டியாக ஒரு அறிவிப்பை வெளியிட வேண்டும் என்றுதான் 'மூக்குத்தி அம்மன் 2' வீடியோவை வெளியிட்டுள்ளார்களாம்.

வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் செல்லப் பிள்ளையாக இருந்தவர் ஆர்ஜே பாலாஜி. அவர்களுக்கு இடையில் என்ன நடந்தது என்பது பற்றி கோலிவுட்டில் கிசுகிசுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

எழுத்துரு விளம்பரங்கள்