சீனாவில் கத்திக்குத்து தாக்குதல் - மூவர் பலி
1 ஐப்பசி 2024 செவ்வாய் 10:37 | பார்வைகள் : 1181
சீனாவின் சங்காய் நகரின் வோல்மார்ட் வணிகவளாகத்தில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டுள்ளனர்.
சீன பொலிஸார் லின் என பெயர்கொண்ட 37 வயது நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள நபர் தனது தனிப்பட்ட பொருளாதார பிரச்சினைக்கு தீர்வை காண்பதற்காக சங்காய் வந்துள்ளார் என்பது விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நகரின் தென்மேற்கு பகுதியில் பொதுமக்கள் அதிகளவில் வசிக்கும் சொங்ஜியாங் என்ற பகுதியில் உள்ள வணிகவளாகத்திலேயே இந்த கத்திக்குத்து தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
இப்பகுதியில் பல பல்கலைகழகங்களும் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.
கத்திக்குத்துக்கு இலக்கான மூவர் மருத்துவமனையில் காயங்கள் காரணமாக உயிரிழந்தனர் என தெரிவித்துள்ள பொலிஸார் ஏனையவர்களிற்கு உயிராபத்தை ஏற்படுத்தக்கூடிய காயங்கள் இல்லை என தெரிவித்துள்ளனர்.
லுடு இன்டநசனல் கொமேர்சியல் பிளாசாவில் நகைகடை வைத்திருக்கும் சி என்பவர் பெருமளவு விசேட படைப்பிரிவினரும் தீயணைப்பு படையினரும் திடீர் என உள்ளே வந்து அனைவரையும் வெளியேறுமாறு கேட்டுக்கொண்டனர் என தெரிவித்துள்ளார்.