Paristamil Navigation Paristamil advert login

■ Grenoble : துப்பாக்கிச்சூட்டில் நகரசபை ஊழியர் படுகாயம்....!!

■ Grenoble : துப்பாக்கிச்சூட்டில் நகரசபை ஊழியர் படுகாயம்....!!

8 புரட்டாசி 2024 ஞாயிறு 15:30 | பார்வைகள் : 2816


விபத்து ஒன்றை ஏற்படுத்திவிட்டு தப்பிச் செல்ல முற்பட்ட  மகிழுந்து சாரதி ஒருவரை, நகரசபை ஊழியர் ஒருவர் தடுத்து நிறுத்த முற்பட்டுள்ளார். அதன்போது குறித்த மகிழுந்து சாரதி துப்பாக்கியால் சுட்டதில் ஊழியர் காயமடைந்துள்ளார்.

இன்று செப்டம்பர் 8, ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணிக்கு இச்சம்பவம் Grenoble
 நகரில் இடம்பெற்றுள்ளது. அந்நகரத்தின் நகரசபைக் கட்டிடத்துக்கு அருகே விபத்து ஒன்று இடம்பெற்றது. விபத்தை ஏற்படுத்திவிட்டு மகிழுந்து சாரதி ஒருவர் அங்கிருந்து தப்பி ஓட முயற்சித்துள்ளார்.

விபத்தை நேரில் பார்த்த நகரசபை ஊழியர், தப்பிச் சென்ற மகிழுந்து சாரதியை மடக்கி பிடிக்க முயற்சித்துள்ளார். அதன் போது துப்பாக்கியால் இரண்டு ஊழியரை நோக்கி சுட்டுள்ளார். படுகாயமடைந்த அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்