தமிழரசுக் கட்சியின் தீர்மானத்தில் எவ்வித ஐயமும் இல்லை - சுமந்திரன் அறிவிப்பு

9 புரட்டாசி 2024 திங்கள் 10:35 | பார்வைகள் : 4658
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதற்கு கட்சி மேற்கொண்டத் தீர்மானத்தில் எவ்வித ஐயமும் இல்லை என்று இலங்கைத் தமிழரசுக் கட்சி அறிவித்துள்ளது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தமது எக்ஸ் தளத்தில் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.
சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதற்கான மீளப்பெறமுடியாத தீர்மானத்தை கடந்த 1ஆம் திகதி மேற்கொண்ட தமிழரசுக் கட்சி, உத்தியோகப்பூர்வமாக அதனை வவுனியாவில் வைத்து அறிவித்தது.
இதுவே கட்சியும், அதன் அனைத்து உறுப்பினர்களும் கொண்டுள்ள நிலைப்பாடாகும். இந்த விடயத்தில் எவ்விதமான குழப்பங்களும் இல்லை என்று எம்.ஏ.சுமந்திரன் அறிவித்துள்ளார்.