சென் நதியில் இருந்து மனித கால்கள் மீட்பு!
12 புரட்டாசி 2024 வியாழன் 20:00 | பார்வைகள் : 3927
சென் நதிக்கரையில் இரு மனிதக் கால்கள் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டது. விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
செப்டம்பர் 10 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இச்சம்பவம் Méricourt (Yvelines) நகரில் இடம்பெற்றுள்ளது. பாதசாரி ஒருவர் முதல் மனிதக் கால் ஒன்றை பார்த்துவிட்டு காவல்துறையினரை அழைத்துள்ளார். அதை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சிறு நேரத்தில் மற்றொரு காலையும் கண்டுபிடித்தனர்.
மலையேற்றவாதிகள் அணியும் சப்பாத்துக்கள் அணிந்த நிலையில் கால்கள் இருந்ததாகவும், 43 ஆம் இலக்க அளவு கொண்ட கால்கள் அவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடனடியாக அவை உடற்கூறு பரிசோதனைகளுக்கு கொண்டுசெல்லப்பட்டன. மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.