புலம்பெயர் தொழிலாளர்கள் மீது தாக்குதல்; 12 நாட்களில் 2வது தீவிரவாத தாக்குதல்
2 கார்த்திகை 2024 சனி 03:40 | பார்வைகள் : 877
ஜம்மு காஷ்மீரில் புலம்பெயர் தொழிலாளர்கள் மீது தீவிரவாதிகள் தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடத்தி வரும் சம்பவம் சக தொழிலாளர்களை மரண பீதியில் ஆழ்த்தியுள்ளது.
புத்கம் மாவட்டத்தில் நீர்வளத்துறையில் தினக்கூலியாக வேலை செய்து வருபவர்கள் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ஷோபியான்,25, உஸ்மான் மாலிக், 25. இந்த நிலையில், இந்த இருவர் மீது தீவிரவாதிகள் நேற்று துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதில், பலத்த காயமடைந்த அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு, ஸ்ரீநகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இது தொடர்பாக தகவல் அறிந்த பாதுகாப்பு படையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளை தேடி வருகின்றனர்.
12 நாட்களுக்கு முன்பு இசட் மோர் சுரங்கப்பாதை கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த புலம்பெயர் தொழிலாளர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில், டாக்டர் உள்பட 7 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து புலம்பெயர் தொழிலாளர்கள் மீது தீவிரவாதிகள் நடத்தும் 6வது தாக்குதல் இதுவாகும். புலம்பெயர் தொழிலாளர்களை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவதால், ஜம்மு காஷ்மீரில் பணியாற்றும் சக தொழிலாளர்கள் பீதியில் உள்ளனர்.