Paristamil Navigation Paristamil advert login

ஹாலிவுட் படத்தின் ரீமேக்கா விடாமுயற்சி?

ஹாலிவுட் படத்தின் ரீமேக்கா விடாமுயற்சி?

29 கார்த்திகை 2024 வெள்ளி 15:20 | பார்வைகள் : 543


மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார், திரிஷா, அர்ஜுன், ஆதவ், ரெஜினா உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி உள்ள படம் விடாமுயற்சி. அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் நேற்று இரவு 11.08 மணிக்கு இந்த விடாமுயற்சி படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த படம் 2025ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாக இருப்பதாகவும் அறிவித்துள்ளார்கள்.

இந்த நிலையில் இந்த விடாமுயற்சி படத்தின் டீசரை பார்த்துவிட்டு இந்த படம் 1997ம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளியான பிரேக் டவுன் என்ற படத்தின் ரீமேக் போன்று இருப்பதாக சோசியல் மீடியாவில் ஒரு கருத்து வெளியாகி வருகிறது. அதாவது பிரேக் டவுன் படத்தின் ஹீரோ தனது மனைவியுடன் காரில் செல்லும் போது கோளாறு ஏற்படுகிறது. அப்போது அந்த வழியாக வந்த ஒரு வண்டியில் மனைவியை ஒரு இடத்தை சொல்லி அங்கு இறக்கி விட்டு வருமாறு கூறுகிறார். ஆனால் அவர் தனது காரை சரி செய்துவிட்டு குறிப்பிட்ட இடத்துக்கு சென்று பார்த்த போது மனைவியை காணவில்லை. அதையடுத்து தனது மனைவியை தேடும் முயற்சியில் அவர் இறங்குவது தான் அந்த பிரேக் டவுன் படத்தின் கதையாகும்.

இந்த நிலையில் அஜித்தின் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பும் அஜர்பைஜானில் நடைபெற்று இருப்பதோடு, கார் விபத்து காட்சியும் படமாக்கப்பட்டது . அதோடு தற்போது இப்படத்தின் டீசரும் அந்த ஹாலிவுட் படத்தின் கதையை ஒன்றி இருப்பதால் இந்த விடாமுயற்சி படம் பிரேக் டவுன் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காககூட இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்