வான் பாதுகாப்பு மண்டலத்திற்குள் சீன, ரஷ்ய இராணுவ விமானங்கள் - தென் கொரியாவில் போர் பதற்றம்
30 கார்த்திகை 2024 சனி 07:33 | பார்வைகள் : 796
தென் கொரியாவில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தென் கொரியாவின் வான் பாதுகாப்பு மண்டலத்திற்குள் 5 சீன இராணுவ விமானங்களும், 6 ரஷ்ய இராணுவ விமானங்களும் நுழைந்ததாக தென் கொரியா இராணுவம் அறிவித்துள்ளது.
கிட்டத்தட்ட 4 மணிநேரம் தென் கொரியாவின் வான் பாதுகாப்பு மண்டலத்திற்குள் வட்டமடித்த 11 சீன மற்றும் ரஷிய இராணுவ விமானங்கள் பின்னர் பாதுகாப்பாக வெளியேறின.
முன்னறிவிப்பின்றி சீன மற்றும் ரஷிய இராணுவ விமானங்கள் தென்கொரிய வான் பாதுகாப்பு மண்டலத்திற்குள் பறந்ததற்கு தென்கொரியா எதிர்ப்பு தெரிவித்தது.
சீன மற்றும் ரஷிய இராணுவ விமானங்கள் தென் கொரியாவின் வான் பாதுகாப்பு மண்டலத்திற்குள் ஊடுருவுவது அடிக்கடி நிகழும் நிகழ்வாகிவிட்டது குறிப்பிடத்தக்கது.