Paristamil Navigation Paristamil advert login

இவ்வருடத்தில் குடும்ப வன்முறையில் 49 பெண்கள் பலி!

இவ்வருடத்தில் குடும்ப வன்முறையில் 49 பெண்கள் பலி!

20 வைகாசி 2024 திங்கள் 19:24 | பார்வைகள் : 1618


இவ்வருடத்தின் ஆரம்பம் முதல் இதுவரை 49 பெண்கள் பிரான்சில் குடும்ப வன்முறை காரணமாக கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

’இவ்வருடத்தில் இரண்டு நாட்களுக்கு ஒரு பெண் கொல்லப்படுகிறார்!” என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக 2022 ஆம் ஆண்டு 118 பேரும், 2023 ஆம் ஆண்டில் 112 பேரும் குடும்ப வன்முறையில் கொல்லப்பட்டிருந்தனர். இந்நிலையில், இவ்வருடம் ஏப்ரல் மாத இறுதி வரை 49 பெண்கள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்சில் வன்முறைகளில் சிக்கும் பெண்களை பாதுகாக்க என இயங்கி வரும் Nous toutes அமைப்பு இத்தகவலை வெளியிட்டுள்ளது. 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்