Paristamil Navigation Paristamil advert login

அமைதி திரும்பும் வரை உக்ரேனுக்கு உதவுவோம்.. ஜனாதிபதி மக்ரோன் சூளுரை..!

அமைதி திரும்பும் வரை உக்ரேனுக்கு உதவுவோம்.. ஜனாதிபதி மக்ரோன் சூளுரை..!

16 ஆனி 2024 ஞாயிறு 07:02 | பார்வைகள் : 999


அமைதி திரும்பும் வரை உக்ரேனுக்கு உதவுவதை நிறுத்தமாட்டோம் என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் அறிவித்துள்ளார்.

”நாங்கள் யுத்தத்தையோ பிரிவினையோ விரும்பவில்லை. நாங்கள் மிக நீண்டகாலத்துக்கான அமைதியை விரும்புகிறோம். சர்வதேச விதிமுறைகளை மதிக்கும் ஒரு நிலைப்பாட்டை உக்ரேனில் ஏற்படுத்த விரும்புகிறோம். அது தேவைப்படும் வரையில் உக்ரேனுக்கு உதவுவோம்.” என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் குறிப்பிட்டுள்ளார். 

2024 ஆம் ஆண்டுக்கான G7 மாநாடு இத்தாலியில் கடந்த மூன்று நாட்களாக இடம்பெற்றிருந்தது. நேற்று இடம்பெற்ற இறுதி நாள் சந்திப்பின் போது ஜனாதிபதி மக்ரோன் இதனைக் குறிப்பிட்டார்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்