Paristamil Navigation Paristamil advert login

ஒரு மில்லியனுக்கும் அதிகமான 'மாற்று' வாக்காளர்கள்..!

ஒரு மில்லியனுக்கும் அதிகமான 'மாற்று' வாக்காளர்கள்..!

21 ஆனி 2024 வெள்ளி 18:37 | பார்வைகள் : 1735


பொதுத்தேர்தலுக்கான நாட்கள் நெருங்கிக்கொண்டிருக்கும் வேளையில், ஒரு மில்லியனுக்கும் அதிகமான 'மாற்று'  (procurations) வாக்காளர்கள் பதிவுசெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதிவு செய்துள்ள வாக்காளர்களுக்கு பதிலாக வேறு ஒருவர் வாக்களிக்க முடியும் என்பதே இந்த procurations முறையாகும்.

அவ்வாறு, ஜூன் 10 ஆம் திகதியில் இருந்து இதுவரை 1,055,067  வாக்காளர்கள் அடையாளம் தங்களை பதிவு செய்துள்ளதாக உள்துறை அமைச்சகம்  தெரிவித்துள்ளது. 

2022 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது அடையாளம் பதிவு செய்தவர்களை விட (1,021,350 பேர்)  இம்முறை 6.2% சதவீதத்தால் அதிகம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்