Paristamil Navigation Paristamil advert login

விண்வெளியில் உருளைக்கிழங்கு - நாசா வெளியிட்ட அரிய புகைப்படம்

விண்வெளியில் உருளைக்கிழங்கு - நாசா வெளியிட்ட அரிய புகைப்படம்

25 ஆனி 2024 செவ்வாய் 08:21 | பார்வைகள் : 173


அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா (NASA) தற்போது விண்வெளியில் உருளைக்கிழங்கு என ஓர் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.  

தற்போது சில கிரகங்களில் ஆராய்ச்சி நடக்கப்பட்டு வருகின்றது.  

அதிலும் கடந்த சில மாதங்களாக செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றதா என்று ஆராய்ச்சி நடக்கப்பட்டு வருகின்றது.

அந்தவகையில் தற்போது விண்வெளியில் உருளைக்கிழங்கு இருப்பதாக நாசா நிறுவனம் அரிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.

பூமிக்கு துணை கிரகமாக நிலவு இருப்பதைப் போல, செவ்வாய்க்கிரகத்திற்கு இரண்டு நிலவுகள் இருக்கின்றன.

அதில் பெரியதான ஃபோபோஸ் செவ்வாய் கிரகத்துடன் மோதும் நிலையில் இருக்கிறது.

ஒவ்வொரு நூறு ஆண்டுக்கும் ஆறு அடி தூரம் என்ற வகையில், செவ்வாய் கிரகத்தை நெருங்கி வரும் இந்த ஃபோபோஸ், 50 மில்லியன் ஆண்டுகளில் செவ்வாய் கிரகத்தில் மோதிவிடும் அபாயமும் காணப்படுகிறது.

இந்நிலையில் ஃபோபோஸ் கிரகத்தின் புகைப்படத்தை ‘விண்வெளி உருளைக்கிழங்கு’ என்ற பெயரில் நாசா வெளியிட்டுள்ளது. 

மேலும் இந்த படம் 2006ஆம் ஆண்டு முதல் செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்து வரும், மார்ஸ் ரீகனைசென்ஸ் ஆர்பிட்டரில் உள்ள உயர் தெளிவுத்திறன் இமேஜிங் அறிவியல் பரிசோதனை (HiRISE) மூலம் எடுக்கப்பட்டது என்று நாசா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்