Paristamil Navigation Paristamil advert login

பிரித்தானிய விமான நிலையத்தில் மின் தடை!

பிரித்தானிய விமான நிலையத்தில் மின் தடை!

24 ஆனி 2024 திங்கள் 09:10 | பார்வைகள் : 518


பிரித்தானிய விமான நிலையத்தில் ஜூன் 23 ஆம் திகதி ஏற்பட்ட மின் தடை காரணமாக, பயணிகள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.

பிரித்தானிய மான்செஸ்டர் விமான நிலையத்தில் நேற்று (ஜூன் 23) முதலாம், இரண்டாம் முனையங்களில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது.

இதனால் விமான சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளதுடன் குறித்த விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய விமானங்களும் வேறு விமான நிலையங்களுக்கு மாற்றிவிடப்பட்டுள்ளன.

இதேவேளை, மூன்றாம் முனையத்திலிருந்து பயணம் செய்யவுள்ள பயணிகள் விமான நிலையத்திற்கு வருகைத்தர முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது.

எனினும், காத்திருக்கும் பயணிகளுக்கே முன்னுரிமை வழங்கப்படும் எனவும், அப்போது தான் கூட்ட நெரிசலை தடுக்க முடியும் எனவும் விமான நிலையம் அறிவித்ததாகவும் கூறப்படுகின்றது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்