Paristamil Navigation Paristamil advert login

 பூனையும் நரியும்

 பூனையும் நரியும்

15 வைகாசி 2024 புதன் 13:35 | பார்வைகள் : 1702


ஒருநாள் பூனைக்கும் நரிக்கும் ஒரு போட்டி வந்துச்சு

இந்த காட்டுலயே நாந்தான் தந்திரகாரன்னு நரி சொல்லுச்சு ,இல்ல இல்ல நாந்தான் தந்திரக்காரன்னு பூனை சொல்லுச்சு

உடனே ரெண்டும் சேந்து ஒரு போட்டி நடத்தி யார் நல்ல தந்திரக்காரன்னு முடிவு பண்ணலாம்னு நினச்சுச்சுங்க
அதுக்காக வேட்டைக்காரர்கள் அதிகம் உலவுற காட்டு பகுதிக்கு ரெண்டும் போச்சுங்க
அப்ப ஒரு பெரிய வேட்டை நாய்கள் தூரத்துல இருந்து ஓடி வர்ற சத்தம் கேட்டுச்சு
உடனே பூன பக்கத்துல இருக்குற மரத்துமேல ஏறி இதுதான் என்னோட தந்திரம்னு சொல்லிட்டு ஒளிஞ்சிகிடுச்சுஉடனே நரி முன்னயும் பின்னையும் ஓடி தன்னோட கால் தடத்தைதரையில பதிச்சுச்சு
அதனால நரி எந்த பக்கம் போயிருக்குனு வேட்டை நாய்களுக்கு தெரியாதுன்னு நரி தந்திரம் பண்ணுச்சு

ஆனா அதுக்குள்ள வேட்டைநாய்கள் அங்க வந்து நரிய பிடிச்சி வேட்டைக்காரர்கள் கிட்ட கொடுத்துடுச்சு

தற்பெருமை பேசுன நரி துரிதமா செயல் படாம போனதால வீணா வேட்டைக்காரர்கள் கிட்ட மாட்டிகிடுச்சு

நீதி : தந்திரத்தை விட பொது அறிவு எப்போதும் மதிப்புக்குரியது. 
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்