■ பிரதமரின் பதவி விலகல் கடிதத்தை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி மக்ரோன்!!
16 ஆடி 2024 செவ்வாய் 12:04 | பார்வைகள் : 2614
பிரதமர் கப்ரியல் அத்தாலின் பதவி விலகல் கடிதத்தினை ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் ஏற்றுக்கொண்டுள்ளார்.
இன்று ஜூலை 16, செவ்வாய்க்கிழமை காலை அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதியின் எலிசே மாளிகையில் இடம்பெற்றது. அதில் வைத்து பிரதமர் கப்ரியல் அத்தால் தனது பதவி விலகல் கடிதத்தினை ஜனாதிபதியிடம் சமர்பித்தார்.
கடிதத்தை ஏற்றுக்கொண்ட மக்ரோன், “பிரதமருக்கும் அமைச்சர்களுக்கும் ஜனாதிபதி நன்றி தெரிவிக்கிறேன்!” என தெரிவித்தார். அதன் பின்னர் அமைச்சர்கள் கப்ரியல் அத்தாலுக்கு கரகோஷம் எழுப்பினர்.