புதிய குடியேற்ற சட்டத்திருத்தம் தொடர்பான அறிவித்தல்கள் அரச வர்த்தமானியில் வெளியானது!
16 ஆடி 2024 செவ்வாய் 13:37 | பார்வைகள் : 5553
அண்மையில் நிறைவேற்றப்பட்ட புதிய குடியேற்ற சட்டத்திருத்தம் தொடர்பில் இன்று வெளியான அரச வர்த்தமானியில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
நாட்டின் குடியேற்ற உரிமை பெறும் ஒருவர், நாட்டின் சட்டதிட்டங்களை மதிக்காத போது, அவரது குடியுரிமை பறிக்கப்பட்டு நாட்டை விட்டு வெளியேற்ற முடியும் என்பது இந்த புதிய சட்டத்திருத்தத்தின் சாராம்சமாகும். பலதரப்பட்ட எதிர்ப்புகளின் பின்னர் இதனை பிரதமர் Elisabeth Borne தலைமையில் சட்டமாக்கப்பட்டது. பல்வேறு வெட்டுக்கொத்துக்கள், தணிக்கைகளுக்குப் பின்னர் பிரான்சின் அரசியலமைப்பு சபை ஏற்றுக்கொண்டது.
இந்நிலையில், அந்த சட்டத்தினை உறுதிப்படுத்து, அது தொடர்பான முழுமையான இறுதி வடிவம் இன்று ஜூலை 16, செவ்வாய்க்கிழமை வெளியான அரச வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“தனிப்பட்ட சுதந்திரம், கருத்து சுதந்திரம், மனசாட்சி, பெண்களுக்கும் ஆண்களுக்கும் இடையிலான சமத்துவம், தனி மனித ஒழுக்கம், குடியரசின் குறிக்கோள், சின்னங்கள், பிராந்திர ஒருமைப்பாடுகள் மற்றும் மதச்சார்பின்னை’ போன்ற நிபந்தனைகளை மீறி செயற்படுபவர்கள் மீது இந்த புதிய சட்டத்திருத்தம் பாயும் என தெரிவிக்கப்படுகிறது.