தேங்காயை பச்சையாக சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் தெரியுமா..?
8 ஐப்பசி 2024 செவ்வாய் 14:08 | பார்வைகள் : 1332
தேங்காய் சுவையானது மட்டுமல்ல, நம் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளையும் வழங்குகிறது. இரும்பு, பொட்டாசியம் மற்றும் மாக்னீசியம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களால் நிரம்பிய தேங்காய், ஒட்டுமொத்த ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை ஆதரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. உங்கள் தினசரி உணவில் தேங்காயை பச்சையாக சேர்த்து கொள்வதால் பல நன்மைகள் கிடைக்கும். தேங்காயை பச்சையாக அப்படியே சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை இந்தக் கட்டுரையில் தெரிந்துகொள்வோம்.
மலச்சிக்கலைத் தடுக்கிறது : மலச்சிக்கல் என்பது ஒரு பொதுவான செரிமான பிரச்சனையாகும். இது பெரும்பாலும் நார்ச்சத்து பற்றாக்குறையால் ஏற்படுகிறது. தேங்காயில் 61% நார்ச்சத்து இருப்பதால் இது மலசிக்கலுக்கு சிறந்த தீர்வாக உள்ளது. அதிக நார்ச்சத்து உள்ளடக்கம் வழக்கமான குடல் இயக்கங்களை ஊக்குவிக்கிறது மற்றும் ஒட்டுமொத்த செரிமான ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது : தேங்காய் இயற்கையான பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இதை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வதால் பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளைத் தடுக்க உதவும். குறிப்பாக சுவாசப் பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு நன்மை பயக்கும்.
முடி மற்றும் தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது : தேங்காயில் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்துள்ளன. அவை தோல் மற்றும் முடி இரண்டிற்கும் அத்தியாவசிய ஊட்டச்சத்தை அளிக்கின்றன. இந்த இயற்கையான ஈரப்பதம் மென்மையான மற்றும் சருமத்தின் நீர்ச்சத்தை பராமரிக்க உதவுகிறது. இது வயதான தோற்றத்தை தடுக்கும். தோல் வறட்சியை எதிர்த்துப் போராடுகிறது. இதன் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் முகப்பரு போன்ற பொதுவான தோல் பிரச்சனைகளைத் தடுக்க உதவும். தேங்காய் பல்வேறு உச்சந்தலை பிரச்சனைகளை எதிர்த்து போராடி, தலைமுடிகளை வலுவாகவும் பளபளப்பாகவும் வைத்திருக்கும். உங்கள் டயட்டில் தேங்காயைச் சேர்த்துக்கொள்வது, உங்கள் அழகு முறையை மேம்படுத்த எளிய மற்றும் பயனுள்ள வழியாகும்.
இதய ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது : சீரான கொலஸ்ட்ரால் அளவை பராமரிப்பது இதய ஆரோக்கியத்திற்கு முக்கியமானது. இதற்கு உங்கள் உணவில் தேங்காயை சேர்ப்பது நன்மை பயக்கும். பச்சை தேங்காயை உட்கொள்வது ஒட்டுமொத்த கொழுப்பின் அளவைக் குறைக்க உதவும். இதயம் தொடர்பான பிரச்சனைகளின் அபாயத்தைக் குறைக்கும். இந்த சத்தான பழத்தை உங்கள் உணவில் சேர்ப்பதன் மூலம், நீங்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.
ரத்த சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்துகிறது : தேங்காயில் கார்போஹைட்ரேட் குறைவாக உள்ளது மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள், நார்ச்சத்து மற்றும் அமினோ அமிலங்கள் நிரம்பியுள்ளது. இது இரத்த சர்க்கரையை நிர்வகிக்க உதவும். தேங்காயில் உள்ள அதிக நார்ச்சத்து செரிமானத்தை மெதுவாக்குவதோடு இரத்த சர்க்கரை அளவை சீராக பராமரிக்க உதவுகிறது.
உடல் எடையை பராமரிக்க உதவுகிறது : தேங்காயில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால், இதை சாப்பிட்டதும் வயிறு நிறைந்த திருப்தியை தருகிறது. இதன் மூலம் அதிகமாக சாப்பிடும் வாய்ப்பைக் குறைக்கிறது. இது ஆரோக்கியமற்ற சிற்றுண்டிகள் சாப்பிடுவதைத் தடுப்பதோடு உடல் எடையை குறைக்க உதவுகிறது. அதே நேரத்தில் உடல் கொழுப்பை வேகமாக எரிக்கவும் உதவுகிறது.
நோய்களை எதிர்த்துப் போராடுகிறது : ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த தேங்காய் உங்கள் செல்களை ஆக்ஸிஜனேற்ற சேதத்திலிருந்து பாதுகாக்க உதவுகிறது. இது பல்வேறு நோய்களின் அபாயங்களைக் குறைக்க உதவுகிறது மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இத்தகைய நன்மைகள் கொண்ட தேங்காயை உங்கள் டயட்டில் சேர்ப்பதன் மூலம் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை கணிசமாக அதிகரிக்க முடியும்.