மீண்டும் கமலா ஹாரிஸுடன் விவாதம்..... டிரம்ப் வெளியிட்ட பதிவு!
14 புரட்டாசி 2024 சனி 08:11 | பார்வைகள் : 1464
வடக்கு கரோலினாவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின்போது, முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்புடன் இன்னொரு விவாதம் நடத்த தயாராக இருப்பதாக ஜனாதிபதி வேட்பாளர் கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.
அரிசோனாவில் தேர்தல் பிரசாரத்தின்போது செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், "இன்னொரு விவாதத்திற்கான அவசியம் இருப்பதாக நாங்கள் கருதவில்லை" என்று குறிப்பிட்டார்.
இதனை தொடர்ந்து டிரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
ஒரு போட்டியில் தோல்வியடைந்தவர் கூறும் முதல் வார்த்தைகள், 'எனக்கு இன்னொரு போட்டி வேண்டும்' என்பதே ஆகும்.
ஜனநாயக கட்சியின் தீவிர இடதுசாரி வேட்பாளரான தோழர் கமலாவுக்கு எதிரான விவாதத்தில் நான் வெற்றி பெற்றதாக கருத்துக்கணிப்புகள் தெளிவாக கூறுகின்றன.
இதனால் அவர் இன்னொரு விவாதம் வேண்டும் என்று கேட்கிறார்.
மீண்டும் ஒரு விவாதம் நடைபெறாது" என்று பதிவிட்டுள்ளார்.