Paristamil Navigation Paristamil advert login

தயிர் குருமா

தயிர் குருமா

2 தை 2023 திங்கள் 17:00 | பார்வைகள் : 10567


கோடையில் தயிர் அதிகம் சாப்பிட்டால், உடல் நன்கு குளிர்ச்சியுடன் இருக்கும். அதிலும் இதுவரை தயிரை மோர் போன்று கடைந்து தான் குடிப்போம். இல்லையெனில் அதனை சாதத்துடன் சேர்த்து சாப்பிடுவோம். ஆனால் அத்தகைய தயிரை மோராக செய்வது மட்டுமின்றி, தயிர் குருமா போன்றும் செய்யலாம். குறிப்பாக அந்த தயிர் குருமாவில், விருப்பமான காய்கறிகளை சேர்த்து சமைக்கலாம். சரி, இப்போது தயிர் குருமாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! 
 
தேவையான பொருட்கள்:
 
உருளைக்கிழங்கு - 1/4 கிலோ (தோல் சீவி, நறுக்கியது) 
பச்சை பீன்ஸ் - 1/4 கிலோ (நறுக்கியது) 
வெங்காயம் - 3 (நறுக்கியது) 
புளிக்காத தயிர் - 1 1/2 கப் 
கரம் மசாலா தூள் - 1/4 டீஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு 
எண்ணெய் - தேவையான அளவு 
அரைப்பதற்கு... தேங்காய் - 1/2 மூடி (துருவியது) 
முந்திரிப் பருப்பு - 10 கசகசா - 2 டீஸ்பூன் 
பச்சை மிளகாய் - 7 
 
செய்முறை: 
 
முதலில் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் ஒரு பாத்திரத்தை வைத்து, நறுக்கிய காய்கறிகளை போட்டு, அவை மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி, 1 விசில் விட்டு இறக்கிவிட வேண்டும். பின்னர் மிக்ஸியில் அரைப்பதற்கு கொடுத்தப் பொருட்களை போட்டு, நன்கு நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
 
அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். பின்பு அதில் நறுக்கிய வெங்காயத்தை போட்டு, பொன்னிறமாக வதக்கிக் கொள்ளவும். பிறகு அரைத்து வைத்துள்ள மசாலா மற்றும் வேக வைத்த காய்கறிகளை சேர்த்து, தயிரை கடைந்து ஊற்றி, தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும்.
 
 இறுதியில் அதில் கரம மசாலா சேர்த்து, குருமா சற்று லேசாக கெட்டியாகும் வரை கொதிக்க விட்டு இறக்க வேண்டும். இப்போது சுவையான தயிர் குருமா ரெடி!!! இதனை சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும். 
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்