ஈஃபிள் கோபுரத்தில் ஏறிய ஒருவர் கைது..!

12 ஆவணி 2024 திங்கள் 01:35 | பார்வைகள் : 11107
ஈஃபிள் கோபுரத்தில் வெளிப்புற கம்பிகள் வழியாக ஏறிய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று ஓகஸ்ட் 11, ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 2.45 மணி அளவில் நபர் ஒருவர் ஈஃபிள் கோபுரத்தில் ஏறியுள்ளார். கம்பிகள் வழியே மிக ஆபத்தான முறையில் கோபுரத்தில் ஏறியுள்ளார்.
மேலாடை அணியாமல் அவர் வேகமாக மேலே ஏறுவதை பார்த்த பார்வையாளர்கள், அவரை புகைப்படம் எடுத்தனர். அங்கு பெரும் குழப்பங்களும் ஏற்பட்டது.
அதையடுத்து, காவல்துறையினர் குறித்த நபரை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
15 நிமிட தடையின் பின்னர், 3 மணி அளவில் மீண்டும் கோபுரத்தில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர். கோபுரத்தில் ஏறியவர் யார் என்பது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.